புதுடில்லி ;”எல்லை பாதுகாப்புக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. ஏனெனில் எல்லை பாதுகாப்பு என்பது, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான சீனாவுடனான எல்லையில் உள்ள கிராமங்களின் மேம்பாடு மற்றும் எல்லைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், 2022 பட்ஜெட்டில், பிரதமர் மோடி அரசு, ‘எழுச்சிமிக்க கிராமங்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் குறித்த பயிலரங்கு, புதுடில்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று துவங்கியது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

சமீபத்திய தமிழ் செய்திகள்

‘எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்கள், நாட்டின் கடைக்கோடி கிராமங்கள் இல்லை, முதல் கிராமங்கள்’ என பிரதமர் மோடி உறுதியுடன் கூறி வருகிறார்.

எல்லை பாதுகாப்புக்கு மத்திய அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. ஏனெனில், எல்லை பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது.

எல்லையில் உள்ள கிராமங்கள் பாதுகாப்பாக இல்லையெனில், நாடு பாதுகாப்பாக இருக்காது.

எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்வை தவிர்ப்பதற்காகவே, எழுச்சிமிக்க கிராமங்கள் திட்டம் அறிவிக்கப்பட்டு, அந்த கிராமங்களை மேம்படுத்தும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை வளர்ச்சி அடைந்த கிராமங்களாக மாற்றுவது தான் மத்திய அரசின் நோக்கம்.

இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் தே.ஜ., கூட்டணி அரசு, எல்லை பகுதியில் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


விளம்பரம்




Source link