திருச்சிராப்பள்ளி, உறையூர் ராஜேஸ் கண்ணா மளிகை, உறையூர் ஸ்ரீ நாகநாதர் டீஸ்டால், உறையூர் செந்தில் குமார் மளிகை, சாலை ரோடு குரு பீடா ஸ்டால் மற்றும் ரோடு ரவி டீ ஸ்டால் ஆகிய கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டா. ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த ஐந்து கடைகளும் சீல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் இந்த ஐந்து கடைகளிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அந்த ஐந்து கடைகளுக்கும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000- அபராதம் விதிக்கப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருள்கள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவிப்பவர்கள் 99449 59595, 95859 59595 என்ற எண் அல்லது 9444042322 என்ற மாநில புகார் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link