நீலகிரி கோடை மாவட்ட விடுமுறையை கொண்டாடி மகிழ ஆண்டுதோறும் ஏராளமான கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, உதகையில் மலர் கண்காட்சி உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்து வந்தது. அந்த வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக்கண்காட்சி துவங்கியது.

இந்த கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர். குன்னூர் பழக் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை சிம்ஸ் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

அனுமதி வாங்கிய சுற்றுலா பயணிகள் உள்ளே சென்றவுடன் பழங்களால் ஆன பிரம்மாண்ட வடிவங்கள் அவர்களை அன்புடன் வரவேற்கிறது. உண்டு ரசித்த பழங்களை வைத்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க இங்கு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்புழு வடிவம் அண்ணாச்சி பலத்தால் ஆன பிரம்மாண்ட அண்ணாசி பழ வடிவம் பழக் கூடை மேலும் ஆரஞ்சுகளால் பிரமிடு மற்றும் திராட்சையை வைத்து முற்றிலுமாக மலபார் அணி உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் களைகட்டும் பழக்கண்காட்சி

மேலும் நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகள் மட்டுமல்ல நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் புதுவித அனுபவமாகவே இருந்து வருகிறது. குடில்களில் ஆரஞ்சுகளால் ஆன பட்டாம்பூச்சி வடிவம் சாத்துக்குடியால் மீன் வடிவம் உள்ளிட்டவை இவற்றின் அருகாமையில் முலாம் பழங்களை வைத்து அமைக்கப்பட்ட மீன் வடிவங்களும் அமைந்துள்ளன.

இதையும் படிங்க : மிரட்டும் அரிசிக்கொம்பன் யானை.. கம்பம் நகர் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..

மேலும் இங்கு பல்வேறு வியாபாரிகள் குடிகள் அமைத்து நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு மிகுந்த பழங்களை அவர்களுக்கு வழங்கி நீலகிரி மாவட்ட பழங்களின் சிறப்புகளை எடுத்துரைத்து வருகின்றனர். குடில்களில் நீலகிரி மாவட்ட பழங்குடியினர் தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்படும் தேன் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிம்ஸ் பூங்கா மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிம்ஸ் பூங்கா அருகே கண்ணாடி மாளிகை அருகே தோரணம் போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கோடை விழாவின் கடைசி கண்காட்சியான இந்த கண்காட்சியை காண்பதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link