திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது, திராவிடமும் ஆன்மீகமும் சேர்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி அமைச்சர் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனை வெளியீட்டு மலர் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 31,73,972 நலத்திட்டப் பணிகள் 68,970 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் 635 பயனாளிகளுக்கு 1.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வரும் காலத்தில் திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிடமும் ஆன்மீகமும் சேர்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த மாவட்டத்தில் பல்வேறு கோவில்கள் புனரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியால்தான் ஆன்மீகம் பாதுகாக்கப்படுகிறது என்று அமைச்சர் பேசினார்.

உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

இதையும் படியுங்கள்: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்… மம்தா, கெஜ்ரிவால், கேசிஆர் உள்ளிட்ட முதலமைச்சர்கள் புறக்கணிப்பு

தொடர்ந்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுகவில் சாதனை புத்தகத்தை வாங்கி, எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்களோ அந்த மக்களுக்கு இந்த ஆட்சியினுடைய இரண்டு ஆண்டு சாதனைகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டில் இந்த ஆட்சி மக்களைத் தேடி அதிகாரிகள் செல்லக்கூடிய ஆட்சியாக உள்ளது என்றும், மக்களை தேடி செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டதற்குப் பெயர்தான் திராவிடம் மாடல் ஆட்சி என்றும் பெருமிதமாய் கூறினார். கள்ளக்குறிச்சியில் புறவழிச் சாலை அமைப்பதற்காக 15.4 கிலோமீட்டர் தொலைவில் திட்ட அறிக்கை தயார் என்றும் அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் பேசினார்.

செய்தியாளர் : எஸ்.செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link