கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக அளவில் பல்வேறு தொழில் வாய்ப்புகளை வழங்கி வரும் ஆடை வடிவமைப்பு மற்றும் புத்தாக்கம் துறையில் 3 ஆண்டு பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில் பி.எஸ்சி. ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் பிரிவானது தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் பிரிவு பேராசிரியர் மேனகா கூறினார், “இப்படிப்பினை பூர்த்தி செய்யும் மாணவர்கள் வருங்காலங்களில் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், திரைப்படத் தொழில்துறை போன்றவற்றில் ஆடை வடிவமைப்பு, வடிவமைப்பு மேம்பாட்டாளர், வணிகர், தொழில்துறை பொறியாளர், வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பாளர், தர ஆய்வாளர், வீட்டுப் பொறுப்பாளர், ஆன்சைட் இன்ஸ்பெக்டர் , தயாரிப்பு மேற்பார்வையாளர், முன்னணி பிரபலங்களுக்கான வடிவமைப்பாளர் போன்ற பல உயரிய நிலைகளில் பல வேலை வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆடை வடிவமைப்பு
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
மேலும் சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் சொந்தமாக ஆடைத் தொழில், பொட்டிக் கடை வைத்து தொழில் அதிபராக மாறலாம். கல்லூரியில் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள், அனுபவமிக்க பேராசிரியர்கள், பல முன்னணி தொழிற்சாலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிறப்பான புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் மூலம் மாணவர்களை உருவாக்குகிறோம்” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: