கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட புகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது, ​​அதிகாரிகளை உள்ளே செல்லவிடாமல் அவரின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதுடன், தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதேபோன்று, ஆண்டான்கோவில் புதூர் பகுதியில் உள்ள பாலவிநாயகா ப்ளூ மெட்டல் உரிமையாளர் வீடு, தங்கராஜ், கொங்கு மெஸ் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Mann Ki Baat | தமிழர்கள் விருந்தோம்பல் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டு

உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)

மேலும் கரூர் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளின் அடிப்படையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கரூர் துணை மேயர் தாரணி சரவணனுக்கு சொந்தமான ராயனூரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி முற்பட்டபோது அதிகாரிகளை தாக்கியதாக, தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்- கார்த்திகேயன் (கரூர்)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link