பெரம்பலூரில் மாவட்ட காவல் துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்டியது. பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் காவல் துறை இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நடைபெறுவதைப் போன்ற இனிய தெரு நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்த மாவட்ட காவல் துறை முடிவு செய்தது.

இதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி தலைமையில் பெரம்பலூர் வெங்கடேசபுரம் திருச்சி சாலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தப்பாட்டம், பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக நடனமாடினர்.

இதில் சபரி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை போட்ட ஆட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தப்பாட்டத்திற்கு ஏற்றவாறு குத்தாட்டம் போட்ட அக்குழந்தைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கினார்.

உங்கள் நகரத்திலிருந்து(பெரம்பலூர்)

பெரம்பலூர்

பெரம்பலூர்

‘ isDesktop=”true” id=”995746″ youtubeid=”-h9FF193IaI” category=”perambalur”>

தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடைபெறும் என அறிவித்த காவல் துறையினர், மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link