திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடை ரோடு சுற்று வட்டார பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்தே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் தென்னை மரம், மாமரம், சப்போட்டா, முந்திரி பழம், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளும், ரோஜா பூ மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ உள்ளிட்ட பூ வகைகளும் ஏராளமாக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இவ்வாறு விவசாயம் செய்வதற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. கொடைரோடு பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறுமலை நீர் தேக்கம்.

முட்புதராக காட்சிதரும் சிறுமலை அணை நீர்த்தேக்கம்
உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)
இந்த சிறுமலை நீர் தேக்கத்தில் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு நீரில்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த சிறுமலை நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரும் ஓடைகளில் முட்புதர்கள் மண்டி இருப்பதால் தண்ணீர் செல்ல வழியின்றி விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
எனவே விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரும் வகையில் ஓடைகளை சுத்தம் செய்வதுடன், மேலும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: