2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து சொன்ன கையோடு வெற்றியை தவற விட்ட குஜராத் அணிக்கு நம்பிக்கையையும் விதைத்திருக்கிறார் நம்ம ஊர்க்காரர் சுந்தர் பிச்சை.

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடர்களில் இந்தியன் பிரிமியர் லீக் தான் மாஸ் என்று சொன்னால் கூட தகும். கிட்டத்தட்ட கிரிக்கெட் உலக கோப்பைக்கு இணையான வரவேற்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி விடுகிறது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியும் அதற்கான வரவேற்பு கூடிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் 2023 ஐபிஎல் தொடர் ஏகப்பட்ட அதிரடி திருப்பங்களோடு நடந்து முடிந்திருக்கிறது.

அதைவிட பெரிய கொண்டாட்டம் என்னவென்றால் இந்த தொடரில் கோப்பையை வென்றிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டி ஒரு திருவிழாவைப் போல நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆரம்பித்தனர்.

ஆனால் சென்னை அணி வீரர்கள் கையில் கிடைத்த கேட்ச்களை தவறவிட்டனர். இதனால் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். கடைசியில் 214 ரன்கள் எடுத்தது குஜராத் அணி. 215 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அண்மையில் தோனிக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கும் முட்டிக் கொண்டது என பலரும் பேசிக் கொண்டனர். ஆனால் 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றிக் கோப்பையை தோனியின் கைகளில் கொடுத்தது ரவீந்திர ஜடேஜா தான்.

ஜடேஜாவை குழந்தையைப் போல தூக்கி உச்சி முகர்ந்தார் தோனி. இப்படி உணர்ச்சிப் பெருக்குடன் சிஎஸ்கே அணி கேப்டன் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என முக்கிய நபர்கள் தொடங்கி சாதாரண ரசிகர்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்கள் வாழ்த்துமழையால் நனைய வைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: “சிஎஸ்கே 5 டைட்டில்… நம்பவே முடியலே ..!”- கவுதம் கம்பீர் ட்வீட்

இந்நிலையில் சென்னையில் பிறந்து வளர்ந்து இப்போது கூகுள் நிறுவனத்தின் சிஐஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையும் சிஎஸ்கே அணியும் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்து சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். எப்போதும் போல டாடா ஐபிஎல் சிறப்பானது. சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவான அணியாக திரும்பி வர வாழ்த்துக்கள் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link