பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு உதவுமாறு காலையில் இதர வாகன ஓட்டுநர்களுக்கு சென்னை மாநகர் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை, கும்பகோணம், திருச்சி உட்பட 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுனர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சைதாப்பேட்டை, கேகே நகர், வடபழனி, ஆவடி உள்ளிட்ட 33 பணிமனைகளை சேர்ந்த பேருந்துகளும் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டன. தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து பயணிகள் வசதிக்காக, கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு தெரிவித்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

இந்நிலையில், பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு உதவுமாறு காலை இதர வாகன ஓட்டுநர்களுக்கு சென்னை மாநகர் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ” சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பிற அரசு போக்குவரத்துத் துறை பேருந்துகள் தற்போது தற்காலிகமாக இயக்கப்படாததால், பொதுமக்கள் அவரவர் சேருமிடத்திற்குச் செல்ல உதவுமாறும், விதிகளுக்கு உட்பட்ட பயணிகளிடம் கட்டணங்களை வசூலிக்குமாறும் அனைத்து ஆட்டோ/ஷேர் ஆட்டோ/டாக்ஸி & கால் டாக்ஸி/மேக்ஸி கேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ” என்று பதிவிட்டுள்ளது.

இதற்கிடையே, போராட்டங்கள் திரும்ப பெறுவதாக பேருந்து தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து, மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. 33 பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன.

பயணிகள் வசதிக்காக, கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு தெரிவித்தார்.

இந்நிலையில், போக்குவரத்து துறை தனியார்மயமாதல் தொடர்பாக நாளை அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்த உள்ளன. இதனை தொடர்ந்து வரும் 31 ஆம் தேதி போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:





Source link