மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு தமிழக முதல்வர் சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக விவசாய சங்கத் தலைவர் வேலுச்சாமி அறிவித்துள்ளார்.
நேற்று கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட மேகதாது ஆணையத்தை கட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து அணை கட்ட முயற்சி செய்வேன் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்தலைவர்கள் விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாய சங்கத் தலைவர் வேலுச்சாமி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சி செய்வோம் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் தமிழக அரசு சார்பில் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அதையும் மீறி கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் உள்ளஅனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளை அணையை அணைத்து தகர்த்திடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் – மோகன்ராஜ்