பயணம் என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. எவ்வளவு தான் கஷ்டம் இருந்தாலும் சற்று நேரம் செலவழித்து சிறிது தொலைவு சென்று வந்தாலே போதும், மனதில் இருக்கும் அத்தனை பாரங்களும் இறங்கிவிடும். புது உத்வேகம் கிடைக்கும்.
அன்றைய 90ஸ் கிட்ஸ் கோவா செல்ல திட்டமிட்டனர் என்றால் இன்றைய 2கே கிட்ஸ் ஒரு படி மேலே போய் லடாக் சென்று வருகின்றனர். லடாக் மீது மோகம் கொண்டு செல்வது லிஃப்ட் கேட்டு செல்வது என அவர்கள் திட்டமிடும் பயண முறை வியப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் லடாக் போக வேண்டும் என்ற ஆசையில் தன்னிடம் இருந்து ஸ்கூட்டியில் சென்று வந்த இளைஞர் ஒருவர் இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்த இளைஞர் செல்வா. பயணம் செய்வதில் அதீத ஆர்வம் உடைய இவர் தமிழகம் முழுவதும் சென்று வந்ததோடு, கடந்த ஜனவரி மாதம் தன்னிடம் இருந்து ஸ்கூட்டியை எடுத்து வடக்கு நோக்கி புறப்பட்டவர் 48 நாட்கள் பயணம் செய்து லடாக் வரை சென்று வீடு திரும்பினார். இதை அறிந்த இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் அமைப்பினர் அவருக்கு, ஸ்கூட்டியில் நெடுந்தூரம் பயணம் செய்தவர் என்ற சாதனைக்கான சான்றிதழை வழங்கி கவுரவித்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இது குறித்து பேசிய இளைஞர் செல்வா, சாதனை படைக்க வேண்டும் என்று இதை செய்யவில்லை, புதிய இடங்களுக்கு சென்று நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் லடாக் வரை பயணம் செய்ததாகவும், அதற்கு ஏற்ற சரியான வண்டி இல்லாத போதும் தன்னிடம் இருக்கும் ஸ்கூட்டியை வைத்து சென்று வருவோம் என முயற்சி செய்து வர அதை சாதனையாக கருதுங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றார். கையில் வெறும் 5000 மட்டும் எடுத்துக் கொண்டு, தங்குவதற்கு வழிநெடுக உள்ள பெட்ரோல் பங்குகளை தேர்வு செய்து, நண்பர்களின் உதவியுடன் இந்தியாவில் தென்முனையில் இருந்து தொடங்கிய பயணத்தில், பல்வேறு மனிதர்களை சந்தித்து பலவிதமான விஷயங்களை கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
கலைஞரான இவர் எப்போதும் பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பதால், உலகம் முழுவதும் ஒரு முறை சுற்றி வர வேண்டும் அது தான் வாழ்வின் இலட்சியம் என கூறிவிட்டு ஸ்கூட்டியில் பறந்து விட்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: