சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி தயாரித்து வந்த குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

சேலம் இரும்பாலை அருகே சர்க்கார் கொல்லப்பட்ட பகுதியில் ஏராளமான வெடி நாட்டு பட்டாசுகள், மேலே எழும்பி வெடிக்கும் பட்டாசுகள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் திருவிழாவிற்காக சர்க்கார் கொல்லப்பட்டு அதிக அளவில் நாட்டு வெடி மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்ட நிலையில் சதிஸ் என்பவர் தனது விளை நிலத்தின் ஒரு பகுதியில் 10க்கு 12 என்ற அளவில் தகரத்தால் ஆன சர்க்கிள் வானம் என்ற பெயரில் குடோன் அமைத்து நாட்டு பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)

இந்த நிலையில் நேற்று காலை உரிமையாளர் சதீஷ் மற்றும் 6 பெண்கள் உட்பட 9 பேர் பட்டாசு குடோனில் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 4 மணியளவில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட பயங்கர சத்தத்துடன் பட்டாசு குடோன் வெடித்து சிதறியது.

இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அனைவரும் தூக்கி எரியபட்டனர். இதன் உரிமையாளர் சதீஷ் மற்றும் நடேசன் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் அறிந்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிருந்தா, மோகனா, வசந்தா, மகேஸ்வரி, மணிமேகலை, பிரபாகரன் உள்ளிட்ட 6 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க…“வடிவேலு நடிக்கவில்லை என்றால் மாமன்னன் படம் உருவாகியிருக்காது..!” – உதயநிதி ஸ்டாலின்

இதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, துணை ஆணையாளர் லாவண்யா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தடையவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் வெடி தூக்கி வீசப்பட்ட உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை சேகரித்தனர். தொடர்ந்து வெடி விபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து உரிய உரிமம் பெற்றுள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இதனிடையே பட்டாசு கிடங்கு தீ விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link