தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கனஅடி தண்ணீரையும் சேர்த்து 300 கன அடி தண்ணீரை இன்று முதல் (01.06.2023) முதல் 120 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட . இதற்கு விவசாயிகள் மிகுந்த வரவேற்பளித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14,707 ஏக்கர் ஆயக்கட்டு பகுதி கம்பம் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை . முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக இந்த 14,707 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளிலும் இரு போக நெல்சாகுபடி செய்யப்படுகிறது . ஆண்டுதோறும் ஜூன் 1 – ஆம் தேதி முதல் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

முல்லைப் பெரியாறு

ஆனால் கடந்த சில வருடங்களாக முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 1 ஆம் தேதி போதிய நீர் இருப்பு இல்லாமல் இருந்த காரணத்தால் ஜூன் 1 – ஆம் தேதி திறக்கப்படவில்லை . மாறாக , ஜூலை , ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் தான் திறக்கப்பட்டது . இதனால் இருபோக சாகுபடி செய்ய முடியாமல் ஒரு போக சாகுபடி மட்டுமே செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு முதல் முல்லை பெரியாறு அணையில் 112 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்ததால், ஜூன் 1 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு(2023) முதல் போக பாசனத்திற்காக ஜூன் 1 ஆம் தேதி நீர் திறக்கப்படுமா ? என்று விவசாயிகள் எதிர்பார்த்து வந்தனர். தற்போதைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் 118.45 அடி தண்ணீர் இருப்பதால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகவும் முதல் போக பாசனத்திற்காகவும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தண்ணீர் திறப்பு

கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கனஅடி தண்ணீரையும் சேர்த்து 300 கன அடி தண்ணீரை 01.06.2023 முதல் 120 நாட்களுக்கு, தேவைக்கேற்ப, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து பொறுத்து பெரியாறு அணையை திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அணைப் பகுதியில் போதுமான மழை பெய்து போதிய நீர் இருப்பு இருந்ததால் ஜூன் 1 ஆம் தேதி நீர் திறக்கப்படுமா ? என்று விவசாயிகள் எதிர்பார்த்து வந்த நிலையில், அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது . அதன்படி இன்று தேக்கடி தலைமதகு பகுதியில் இருந்து மதகை இயக்கி அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீரை திறந்து வைத்தார் .

விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் , கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு 200 கன அடியும் , தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு 100 கன அடியும் ஆக பெரிய மொத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி விதம் திறக்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீர் திறப்பின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கரும், போடிவட்டத்தில் 488 ஏக்கரும், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கரும் என மொத்தம் 14,707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link