திருச்சியில் இரண்டு தனியார் பேருந்துகளுக்குள் நடந்த போட்டியால் பேருந்து சக்கரத்தில் சிக்கி கால் நசுங்கி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் ரோஸ் நிர்மலா (வயது 53). திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த, 18ம் தேதி மதியம் காந்தி மார்க்கெட்- வெங்காயமண்டி சந்திப்பில் பேருந்து ஏற காத்திருந்தார். அங்கு வந்த தனியார் பேருந்தில் கூட்டமாக இருந்தது. அதனால், தடுப்புக்கம்பியை தாண்டி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நிர்மலா ஏற முயன்றார். ஏற்கனவே நிற்கும் பேருந்தை முந்திச் செல்லும் நோக்கில் இருந்த பேருந்து ஓட்டுனர், இவரை கவனிக்காமல் பேருந்தை வேகமாக நகர்த்தி விட்டார்.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

இதனால், படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நிர்மலாவின் கால்களின் மீது பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின. கால்கள் இரண்டும் நைந்த நிலையில் வலியால் அலறி துடித்த அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களை துரத்தி பிடித்து, அடித்து உதைத்தனர்.

மேலும் படிக்கவும் | ‘நீங்க தெய்வம் சார்’ சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக தற்காலிக நிழற்குடை அமைத்த திருச்சி போலீசார்!

தகவலறிந்த, காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை காப்பாற்றி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி கன்டன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த ரோஸ் நிர்மலா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் பேருந்துகள் போட்டியில் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link