நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கை சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். மூன்று பேரும் நண்பர்களான நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் ஜெகதீஸ்வரன் என்கிற சிறுவன் தனது உறவினரின் ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அவனுக்கு ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் போது திடீரென உதித்த ஐடியாவின் பேரில் 200 ரூபாய் நோட்டை அச்சு பிசகாமல் கம்யூட்டரில் கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்துள்ளார். மேலும் இந்த நோட்டுகளை தனது நண்பர்களான சந்தோஷ் , விசுவநாதன் ஆகியோரிடம் கொடுத்து கோவில் திருவிழாக்களில் ஐஸ்கிரீம் , பொம்மைகள் வாங்கி மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் இவை கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(நாகப்பட்டினம்)

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

மேலும் படிக்க… புல்லட் ரயில் வேண்டாம்… பாதுகாப்பு தொழில்நுட்பம்தான் வேண்டும்…” – அன்புமணி ராமதாஸ் பேச்சு

மேலும் இவர்களிடமிருந்து ரூ.32,300 கள்ள நோட்டுகள் மற்றும் அதனை தயாரித்த கம்பியூட்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி பருவத்திலேயே மூன்று சிறுவர்கள் கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பானது.

செய்தியாளர்: பாலமுத்துமணி, நாகப்பட்டினம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link