மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் மணமகன் வீட்டார் – பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தின் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி போலீசார் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை நடத்தியதில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்கள் உணவு உட்கொண்ட பொழுது பாயாசம் பரிமாறியுள்ளனர். அப்போது பாயாசம் சரியில்லாததால் அதனை பெண் வீட்டார் கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரம் சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள், சேர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(மயிலாடுதுறை)

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

‘ isDesktop=”true” id=”1004989″ youtubeid=”67tQErgpll4″ category=”mayiladuthurai”>

மேலும் படிக்க… School Reopen : தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புது அறிவிப்பு!

மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link