உதகையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வந்தாலும், உதகை படகு இல்லம் அருகே அமைந்துள்ள கர்நாடகா பூங்கா 38 ஏக்கர் அளவு நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக காட்சியளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அப்படி இந்த பூங்காவில் என்ன இருக்கிறது மற்ற பூங்காக்களுக்கும் இந்த பூங்காவிற்கும் என்ன தனித்துவம் என்பதை பார்ப்போம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாதலங்களும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் ஆனால் இந்த பூங்கா நேரடியாக கர்நாடக அரசின் காட்டுப்பட்டியில் இயங்கி வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

இந்த பூங்காவில் பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி என அனைத்து வசதிகளும் உள்ளன மேலும் இங்கு தங்கும் விடுதிகளும் உணவகமும் அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் வாங்கிய பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் இந்த பூங்காவில் ஏராளமான மலர்கலை அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை நடைபாதை முழுவதும் வண்ண வண்ண மலர்கள் உள்ளன மேலும் நார்வே ஸ்ப்ரூஸ் மரத்தினால் ஆங்காங்கே பொம்மை உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் இங்கு புல்வெளி மைதானம் போன்றவை உள்ளன.

புதர் வடிவில் உள்ள புதர் நார்வே ஸ்ப்ரூஸ் மரங்களால் இங்கு அமைந்துள்ளது. பூங்காவில் சிறப்பு அம்சமாக பிரம்மாண்ட பாலம் உள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில் நீரோடையில் பலவகை மீன்கள் ஏராளமாக நீந்தி செல்வது அனைவரது மனதையும் சாந்தமடைய செய்கிறது. ஒரு முதல் மறு முனை வரை பிரம்மாண்ட காட்சியளிக்கும் பாலத்தில் நடந்து செல்லும் திகில் நிறைந்த அனுபவத்தை அனுபவிக்கவே இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link