புதுக்கோட்டை 2023 ஆம் ஆண்டு அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் தேர்வு செய்யவும் நாளை (07.06.2023) கடைசி நாளில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு ஐடிஐயில் சேர www.skiltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)
இ மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அல்லது அனைத்து அசல் சான்றிதழ்களுடன்
(மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்கான ஆவணம், இடப்பெயர் சான்றிதழ் ,ஆதார் அட்டை ,கைபேசி எண் ,மின்னஞ்சல் முகவரி ,புகைப்படம் ஒன்று.)நேரடியாக வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 2023 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழில் பிரிவுகளுக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.
விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50 ஐ கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் மூலம் செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி ,பாட புத்தகம் ,பாஸ் பாஸ், வரைபட கருவிகள், மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூபாய் 750 வழங்கப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை (07.06.2023) கடைசி நாள் ஆகும் .மேலும் விவரங்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதுக்கோட்டை-04322-221584, அரசு தொழிற்பயிற்சி நிலையம், விராலிமலை 8667426792 உதவி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் புதுக்கோட்டை- 04322-29938 எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: