தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கல்லுத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவி தென்கொரியாவில் நடைபெற்ற ஏசியன் யூ 20 தடகள சாம்பியன்ஷிப் 2023ல் பெண்களுக்கான ரிலே போட்டியில் 45.36 வினாடிகளில் ஓடி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தென்கொரியாவில் Yecheon மாகாணத்தில் ஜூன் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்று வரும் ஏசியன் u20 தடகள சாம்பியன்ஷிப் 2023 பெண்கள் பிரிவில் இந்தியா சார்பாக ஓடிய அபிநயா ராஜேந்திரன், ருதிகா சரவணன், அக்ஷயா சரவணன், கனிஸ்டா டீனா மரியா தேவசேகர் ஆகிய நான்கு பேர் பங்கேற்ற ரிலே போட்டியில் வென்று மூன்றாம் பரிசு வென்றனர்.

இதையும் படிங்க : கிக்பாக்சிங் போட்டியில் சாதனை.. காஞ்சிபுரம் கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்..

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

இதில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயா ராஜேந்திரன் டாஸ்கென்ட் நகரில் நடந்த 5வது ஆசிய இளையோருக்கான சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் தமிழ்நாட்டைச் சார்ந்த அபிநயா இந்தியா சார்பாக பங்கு பெற்று 100மீ பிரிவில் 11.82 விநாடிகளில் வெற்றி இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கமும் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link