இந்தியாவை சேர்ந்தவர் முதன்முறையாக யுனெஸ்கோ விருதுக்கு தேர்வாகி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார். அதிலும் அவர் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வருபவர் என்பது கூடுதல் சிறப்பு. வருகிற 14-ந்தேதி பாரிஸில் நடைபெறும் விழாவில் ஜகதீஷ் பக்கன் விருதைப் பெற்று, ஆய்வு குறித்து விரிவுரையாற்றுகிறார்.

ராமநாதபுரம் வனத்துறை அலுவலகம்

ராமநாதபுரம் வனத்துறை அலுவலகம்

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் யுனெஸ்கோ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீஷ் பக்கனுக்கு டிவிட்டரில் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில்,

“ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் இயக்குநரான ஜகதீஷ் பக்கன், யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளக் காப்பக மேலாண்மைக்கான விருது தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளது. அவருக்கு நம் பாராட்டுகள். நம் அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.

ஜூன்-14 அன்று பாரிஸ் நகரில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறுவதுடன், மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கவுள்ள ஜகதீஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.Source link