விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவேரி குக்குரல் அமைப்பு விருதுநகர் கிளை சார்பில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

காவேரி குக்குரல் அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளைச் செய்கிறது. இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடும் மாபெரும் செயலை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக காவேரி கூக்குரல் அமைப்பினர் இந்த ஆண்டு 1.1 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டனர்.

அந்த வகையில் ஜூன் 5ம் தேதி காலை 9 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவேரி குக்குரல் அமைப்பு விருதுநகர் கிளை சார்பில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நத்தம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு 500 மரக்கன்றுகளை நட்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுபற்றி பேசிய காவேரி கூக்குரல் அமைப்பை சேர்ந்த ராஜாமணி, ‘எங்கள் இயக்கம் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு மிகக்குறைந்த விலையிலேயே வழங்குகிறோம். மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய, மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற காவேரி குக்குரல் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link