ராமநாதபுரம் அச்சந்தன் வயல் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் – காளியம்மாள் தம்பதியர். ஊருணி, கண்மாய்களில் குத்தகைக்கு மீன்பிடித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
மெரைன் இன்ஜினியரிங் படித்து முடித்த சுரேஷ் கண்ணன், வளைகுடா நாட்டை தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனத்தில் மாதம் 2 லட்சம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சொந்தமாக ஒரு இடத்தில் வீடு ஒன்றையும் கட்டி கொடுத்துள்ள சுரேஷ் கண்ணன் தாயையும் தந்தையையும் இனி பணிக்கு செல்ல வேண்டாம் எனவும் வீட்டில் ஓய்வெடுக்குமாறும் கூறியுள்ளார்.
ஆனால் உழைத்து தான் வாழ வேண்டும் என விரும்பிய பெற்றோருக்கு, கண்மாய் பகுதியில் இருந்து மீன்களை எடுத்து நகரிலுள்ள மீன்கடைகளுக்கு சென்று விற்பனை செய்து பிற தேவைகளுக்காக புதிதாக சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளார் சுரேஷ் கண்ணன்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

சிவானந்தம் – காளியம்மாள் தம்பதி
இது குறித்து பேசிய சிவானந்தம் தாங்கள் பல தலைமுறைகளாக மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், தங்கள் மகன் தங்களுக்கு கார் வாங்கி கொடுத்தது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ‘நாங்க கஷ்டப்பட்டு அவரை படிக்க வைத்தோம். இப்போது அவர் எங்களுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். கார் எல்லாம் நாங்கள் நினைத்துப்பார்க்க முடியாத விஷம் தான். இப்போது இந்த காரில் தான் மீன்களை எடுத்து சென்று விற்று வருகிறோம். எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு’ என கூறினார்.

மகன் சுரேஷ் கண்ணன்
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்றோற்றான் கொல்எனும் சொல்” என்ற திருக்குறளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது சுரேஷ் கண்ணனின் இந்த செயல்.
செய்தியாளர் : பொ. வீரக்குமரன் (ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: