கூடலூர்: தமிழக – கர்நாடக எல்லையில் விவசாயிகள் சூரிய காந்தி மலர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் படையெடுப்பதால், சூரியகாந்தி தோட்டங்கள் சுற்றுலா தலங்களாக மாறியுள்ளன. இதன் மூலமும் விவசாயிகள் கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த மசினகுடி, மாவனல்லா பகுதிகளில் குண்டுமல்லி, சூரியகாந்தி மலர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி, 120 நாட்களில் வளரும் வீரிய ஓட்டுப்பயிராகும். குறைந்த நீரில் வளர்ந்து அதிக மகசூல் தரக்கூடியது.