ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மதிப்புமிக்க அணி தொடர்பாக houlihan lokey என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி, தோனி இடம்பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு 1,747 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் இரண்டாவது பெரிய மதிப்புமிக்க பிராண்டாக விராட் கோலி இடம்பிடித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளது. பெங்களூரு அணியின் மதிப்பு கடந்தாண்டை விட தற்போது 52 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு கடந்தாண்டை விட 34.8 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் பட்டியலில் கொல்கத்தா அணிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

இதையும் வாசிக்க: மகளிருக்கு மாதம் ரூ.1,000 திட்டம்… விண்ணப்பிக்க ஆதார் வேண்டுமா..? ஆவணங்கள் பட்டியல் இதோ..!

டெல்லி அணிக்கு இந்த பட்டியலில் ஐந்தாம் இடமும், 6ஆம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியின் மதிப்பு 103 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. புதிதாக ஐபிஎல் போட்டிகளில் இணைந்துள்ள லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு பிராண்ட் மதிப்பு உயரவில்லை என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link