திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலைப் போராட்ட அழகுமுத்துக்கோன் வரலாறு குறித்து நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் கூறினார், “இந்திய வரலாற்றில் 1857-ல் தான் முதன்முதலில் விடுதலைப் போராட்டம் வீரர் நடைபெற்றதாகத் தெரிகிறது. அதற்கு முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் மன்னர் வீரன் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டுள்ளார்.
1750 -ல் தந்தை மன்னர் அழகு முத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு வீரஅழகு முத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் கட்டாலங்குளம் சீமையின் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்
1755-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் தளபதிகள் அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் என்று அழைக்கப்பட்ட கான்சாகிப் ஆகியோர் எட்டயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூல் செய்தனர். எட்டயபுரம் அரசர் இவர்களுக்கு வரி கொடுக்க மறுத்து, ‘வணிகம் செய்ய வந்தவர்கள் வரி கேட்பதா?’ என்று கடிதம் எழுதினார். கடிதத்தைக் கண்ட கான்சாகிப் பீரங்கிப் படையுடன் வந்து எட்டாயபுரத்தைத் தாக்கத் தொடங்கினார்.
எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலையாத வீரன் அழகுமுத்துக் கோன் கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். ரத்தம் வழிய போரிட்ட அழகுமுத்துக் கோனையும், அவரது 6 தளபதிகளையும் 248 வீரர்களையும் ஆங்கிலப்படை சிறை பிடித்தது. பீரங்கி முன்பு நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்னர் வீரன் அழகுமுத்துக் கோனும் 6 தளபதிகளும் ஒரு பீரங்கியின் முன் நிறுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுதான் இந்திய மண்ணில் நிகழ்ந்த மிகப் பெரிய முதல் சுதந்திர யுத்தம். இத்தகைய சிறப்புகளை கொண்ட வீரன் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை நினைவு கூர்வோம்” என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.