புதுக்கோட்டை தற்போது மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இம்மழையினை பயன்படுத்தி விவசாயிகள் பசுந்தால் உரம் பயிர், தக்கை பூண்டு போன்ற பயிர்களை சாகுபடி செய்து மண் வளத்தை மேம்படுத்தலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி கூறுகையில், “பசுந்தால், புறா பயிர்கள் வேர்களில் உள்ள பாக்டீரியாக்களின் உதவியால் ஆகாயத்தில் உள்ள தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இதனால் மண்ணில் தழைச்சத்து அதிகரித்து மண் வளம் மேம்படுகிறது. நிலத்தில் உள்ள அங்க பொருட்களின் அளவையும். மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரிப்பதனால் மண் வளம் மேம்படுகிறது.

இதனால் மண்ணில் நீர் பிடிப்பு திறன் அதிகமாகிறது. பசுந்தால் புறா பயிர்களை வளர்ப்பதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. தக்கை பூண்டு மற்றும் சனப்பு விதைகள் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதைப்பு செய்ய வேண்டும். 40 45 நாட்களில் பூ பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு உழவு செய்தால் ஏக்கருக்கு 25 முதல் 30 கிலோ தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. அனைத்து வகை நிலத்திலும் பயிரிடலாம். வடிகால் வசதியற்ற நிலங்களிலும் வறண்ட நிலங்களிலும் களர் நிலங்களிலும் நன்கு வளரும்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

இதையும் படிங்க : சிறு, குறு விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. புதுகை ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை போதுமானது. இது 40 ,45 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும் பொழுது மடக்கி உழவு செய்ய வேண்டும். வடிகால் வசதியுடன் கூடிய நிலங்களில் பயிர் செய்வதுஏற்றது. மணற்சரிவான ஒரு போக நஞ்சைகளில் பயிர் செய்வதற்கு ஏற்றது. கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

இது மெதுவாக வளர்ந்து நிலத்தில் ஆறு முதல் எட்டு மாதம் வரை கடும் வறட்சியையும் தாங்கக் கூடியது. மாடுகள் மேயாது. ஆகவே வேலி அற்ற நிலங்களிலும் பயிர் செய்யலாம். ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ வரை விதை விதைக்க வேண்டும். இதன் விதைகளை மணலுடன் கலந்து லேசாக தூத்தி விட வேண்டும். ஒரு நிலத்தில் 4 முதல் 6 ஆண்டுகள் தொடர்ந்துஇதை விதைத்து பயிர் செய்வதால் அந்த நிலத்தில் தரையில் விழுந்து கிடக்கும் விதைகள் முளைத்து வருடம் வருடம் பயிராகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஆடி மாதங்களில் கொழுஞ்சிச் செடிகளை சேகரித்து நெல் வயல்களுக்கு உரமாக உபயோகிக்கலாம். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற மண்வளத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழவு செய்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link