புதிய வாய்க்கால் பாலம் கட்டும் பணி காரணமாக நெல்லை டவுணில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை டவுண் சந்திப் பிள்ளையார் கோவிலில் காட்சி மண்டபம் வரையிலான சாலையில் அரசரடி விநாயகர் கோவில் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள வாய்க்கால் பாலம் முழுமையாக அகற்றப்பட்டு புதியதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி சந்திப் பிள்ளையார் கோவில் முதல் காட்சி மண்டபம் வரை செல்லும் இரு சக்கர வாகனங்கள் இலகுரக வாகனங்கள் சந்திப் பிள்ளையார் கோவிலில் இருந்து கணேஷ் தியேட்டர் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் செல்ல வேண்டும். சந்திப் பிள்ளையார் கோவில் முதல் கணேஷ் தியேட்டர் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி

மேலும் கணேஷ் தியேட்டரில் இருந்து சந்திப் பிள்ளையார் கோவில் செல்லும் வாகனங்கள் லட்சுமி மஹால் குளப்பிறை தெரு வாகையடி முனை வழியாக சந்திப் பிள்ளையார் கோவில் செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்பின்னர் 24ஆம் தேதியிலிருந்து நிரந்தரமாக படுத்தப்படும் .இதுகுறித்து ஏதாவது ஆலோசனை இருப்பின் பொதுமக்கள் 0462-2562651 என்ற காவல் கட்டுப்பாட்டு எண்ணில் தெரியப்படுத்தலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link