திருவண்ணாமலையில் உயிரிழந்த வெளி நாட்டு பெண்ணின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து
தினந்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் சிலர், அங்கேயே நிலம் வாங்கி அதில் பண்ணை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இதேபோன்று ஏராளமான வெளிநாட்டவர்கள் திருவண்ணாமலையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நெடுங்காவடி பகுதியில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த
72 வயது மதிக்கத்தக்க அண்ணா லூசார்ட்டி என்ற பெண் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த
ஞாயிற்றுக்கிழமை அவரின் உதவியாளரான ஹரி என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மூதாட்டி உடல் அழுகிய நிலையில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் மூதாட்டியின் மரணம் குறித்து வருவாய்துறைக்கு தகவல் தெரிவிக்காமலே அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அவரது
உடலை அடக்கம் செய்துள்ளனர். பின்னர் தடராப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த வருவாய் துறையினர் மூதாட்டி இயற்கையான முறையில் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இரண்டு நாட்களில் காவல்துறையிடம் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.