புதுச்சேரி: புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் மோடி, ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்; பெரிதும் மதிக்கப்படக்கூடிய தலைவராக விளங்கும் ரங்கசாமி நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளில் அவர் என்றும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் திகழ எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Source link