திருநெல்வேலி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு போட்டிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்புபோட்டிகள் நடைபெற உள்ளன. வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் திருநெல்வேலி மண்டல உலக சமுதாய சேவா சங்கத்துடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை (13.08.2023) காலை 11 மணியளவில் இப்போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற உள்ளன. வகுப்பு 6 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உலக நலம் என்ற தலைப்பில் ஓவிய போட்டியும், குரு வணக்கம் பாடல் போட்டியும் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி

இதையும் படிங்க : திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா?

வகுப்பு 9 முதல் 12 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தற்காலத்திற்கேற்ற யோகா என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் தியானத்தின் முக்கியத்துவம் என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற உள்ளது. வரைவதற்கும் எழுதுவதற்கும் தேவையான தாள்கள் வழங்கப்படும்.

இதர எழுது பொருள்களையும் வைத்து எழுத அட்டையையும் மாணவர்களே கொண்டுவர வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும் .மேலும் விவரங்களுக்கு 7502433751 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link