அரக்கோணம் அருகே ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடிய பட்டதாரி வாலிபர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலம் கிராமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (26 ). திருமணமாகாத இவர் பி.சி.ஏ பட்டதாரி. இவரது தந்தை தேவேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

இவரது தாயார் தக்கோலம் கூட்ரோட்டில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். டிபன் கடையில் தாயாருடன் சேர்ந்து விஜயகுமார் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.  மேலும் ஆன்லைனில் விஜயகுமார் ரம்மி விளையாடி வந்தார். விளையாடுவதற்கு போதிய பணம் இல்லாததால் பலரிடம் ரூபாய் 7 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

பணத்தை கொடுத்தவர்கள் திரும்பத் தருமாறு கேட்டு விஜயகுமாரிடம் நச்சரிக்க தொடங்கினர்.  இதில் மன உளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

அதைத்தொடர்ந்து அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி விஜயகுமார் உயிரிழந்தார்.

நீட் தேர்வால் பறிபோன 2 உயிர்கள்.. மகனின் இழப்பை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை

இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கி, பணத்தை திருப்பி தர முடியாத விரக்தியில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

செய்தியாளர்: க.சிவா, ராணிப்பேட்டை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link