மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய பகுதியான திருப்பூர் ரயில் நிலையத்தின் புதுப்பிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் புனரமைப்பு புதுப்பிக்கப்படவுள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 ரயில் நிலையங்களும் அடக்கம்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையம் 22 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. புதிய பொலிவுடன் வரவிருக்கும் ரயில்நிலையத்தில் தெற்கு பக்கமும் வடக்கு பக்கமும் பிரம்மாண்ட நுழைவாயில்கள் அமைக்கப்படவுள்ளது.

திருப்பூர் ரயில் நிலையம்
திருப்பூர்

திருப்பூர்

பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து பிளாட்பாரத்திற்கு செல்லும் பகுதிகள் புதிதாக வடிவமைக்கப்பட உள்ளது. அத்துடன் பயணிகள் வாகனத்தை நிறுத்த ஏதுவாக மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியும் இங்கே அமையவுள்ளது. இதற்கான பணிகளும் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெறும் நிலையில், விரைவில் இந்த பணியானது முடிவடைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link