ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கொரோனா காலத்திற்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் ஊரடங்கின்போது வேலை இல்லாமல் இருந்த நேரத்தில் தொழில் தொடங்க வேண்டும் அதுவும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து காளான் பண்ணை அமைத்து மாதம் ரூ.10,000 லிருந்து ரூ.15,000 வரையிலும் வருமானம் பெற்று அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் விற்று லாபம் பெற்று வருகிறார்.
இதுகுறித்து கார்த்திக் கூறியதாவது, “ராமேஸ்வரம் காந்திநகரில் சரோஜா காளான் பண்ணை அமைத்து நடத்தி வருகிறேன். சென்னையில் வேலை பார்த்து வந்தேன் கொரோனா காலகட்டத்தின் போது வேலை ஏதும் இல்லாத நேரத்தில் தனித்துவமாக ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று
நினைத்தேன்.
அப்படி ஒரு நிறைய தேடல் இருந்தது. அப்போது காளான் வளர்ப்பு பத்தி தெரியவந்தது. புதுச்சேரில் சுந்தரமூர்த்தி என்பவர் காளான் பண்ணை அமைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு, விதைகள் வாங்கி முதல் கொரோனா அலை முடிந்த காலகட்டத்தில் ஆரம்பித்தோம்.

காளான் வளர்க்கும் பட்டதாரி
கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் அதிக நபர்கள் காளான் பண்ணை அமைத்துள்ளனர். அப்பகுதி குளிர்ந்த பகுதி என்பதால் வளர்ப்பது எளிது. ஆனால் நம்முடைய பகுதியில் வெயில் அதிகம் தண்ணீர் அதிகமாக செலவாகும். கூடாரத்தை சுற்றி தண்ணீர் அடித்து அதனை குளிர்ந்த டிகிரி அதாவது 22.01 டிகிரி செல்சியஸில் இருந்து 28.7 செல்சியஸ் ஈரப்பததிலேயே வைத்திருக்க வேண்டும்.
அதன்படி, வீட்டில் உள்ள காலி பகுதியில் ஒரு கூடாரம் அமைத்துள்ளேன். அதில் 200க்கும் மேற்பட்ட காளான் பெட் வைத்துள்ளேன். மேலும், மற்றும் கூடாரமும் வைத்துள்ளேன். இதில் வரும் காளான் பக்கத்தில் உள்ள வீடுகள், கடைகளில் விற்பனை செய்து வருகிறேன்.
இதையும் படிங்க : திண்டுக்கல்லில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கம் பற்றி தெரியுமா?
இயற்கை முறையில் எந்தவொரு இரசாயனமும் இல்லாமல் செய்வதால் வாடிக்கையாளர்களுக்கும் பிடித்திருப்பதால் திரும்ப திரும்ப கேட்டு வாங்குகின்றனர். இதன் மூலம் மாதம் ரூ.10,000 லிருந்து ரூ.15,000-ம் வரை வருமானம் கிடைக்கிறது. இரண்டாவது கூடாரம் அமைத்த பிறகு அதிகமான கடைகளில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். நோய்த்தொற்று என்பது கொசு கடிப்பதால் மட்டுமே வரும், இதற்காக கூடாரத்தை சுற்றி மருந்து தெளிப்பதால் கொசுவின் தாக்கமும் இருக்காது.
காளான் உருவாக்கும் முறை
வைக்கோலை எடுத்து அதனை தொற்று நீக்கம் செய்து, காளான் விதைகள் ப்ளாஸ்டிக் கவருக்கள் வைக்கோல் வைத்து அதன் மேல் விதையை போட்டு இவ்வாறு எட்டு அடுக்காக வைக்க வேண்டும்.
இப்படி வைத்த 22வது நாள் மொட்டு வெளியேவரும். அப்போது அந்த பெட்டில் ஓட்டை போட்டு அதன் வழியாக காளான் வரும், அதன்பிறகு அந்த பெட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஓட்டைப்போட்டு காளான் வெளியே வந்து பெரிதான பிறகு அதை எடுத்து விற்பனை செய்கிறோம்” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.