கரூர்
மாநகராட்சிக்கு பேப்பர், பேனா, பென்சில், நோட்டு வாங்க 50 லட்சம் ரூபாய் செலவு செய்தது குறித்து கேள்வி எழுப்பிய கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 50 லட்ச ரூபாய் ஊழல் செய்திருப்பதாக மாமன்ற கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் நகலை வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததை காரணம் காட்டி
அதிமுக
கவுன்சிலர்கள் சுரேஷ் மற்றும் ஆண்டாள் தினேஷை இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி மேயர் உத்தரவிட்டார்.

கரூர் மாநகராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விட, பராமரிக்க 6  மாதங்களுக்கு அவுட் சோர்சிங் முறையில் ரூ. 2.18 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் பேப்பர், பேனா, பென்சில் 50 லட்சம் டெண்டர் விவகாரமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவுட் சோர்சிங் முறையில் மாநகராட்சிக்கு பணி நியமணம் டெண்டர் தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி பகுதியில் 14 நீரேற்று நிலையம், 47 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.  இந்த 61 இடங்களில் உள்ள தொட்டிகளை இயக்குதல், பராமரிப்பு செய்யும் பணிக்கு அவுட் சோர்சிங் முறையில் ரூ. 2.18 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நீரேற்று நிலையத்திற்கு 1.04 லட்சம், ஒரு மேல்நிலைத் தொட்டிக்கு ரூ. 45 ஆயிரம் என மாதம் ஒன்றுக்கு செலவிட திட்டமிட்டுள்ளனர்.

கரூர் மாநகராட்சி

தற்போது ஒரு வார்டில் 5 முதல் 6 மேல்நிலை தொட்டிகள் உள்ளது என்றால்,  அங்கு ரூ. 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள டெண்டர் படி ஒரு தொட்டிக்கு ரூ. 45 ஆயிரம்  செலவு செய்யப்படுகிறது. இந்த அதிகப்படியான செலவினம் தேவையா? யாருக்காக இந்த அதிகப்படியான டெண்டர் விடப்பட்டது என கூறி,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மற்றும் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நேற்று (ஆக.30) நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட  62 தீர்மானங்களில் சுமார் 10 தீர்மானங்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.  இதனால் மாமன்ற கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

விளம்பரம்

அதிமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

இதைத் தொடர்ந்துகரூர் மாநகராட்சிக்கு பேப்பர், பேனா, பென்சில், நோட் வாங்க கடந்த கூட்டத்தில் 25 லட்சம் ஒதுக்கீடு இன்றைய கூட்டத்தில் 25 லட்சம் என 50 லட்சம் ரூபாய் செலவுக்கு தீர்மானம் குறித்தும், அவுட்சோர்சிங் முறையில் ரூ. 2.18 லட்சம் செலவில் பணி ஆட்கள் அமைப்பது குறித்து ஒரு நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளன. மாமன்ற கூட்டத்திற்கு முன்பே இதுகுறித்து கருத்து தெரிவித்து நாளிதழுக்கு பேட்டி கொடுத்த அதிமுக கவுன்சிலர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மேயர் கவிதா,  அதிமுக கவுன்சிலர்கள் இருவரையும் அடுத்து இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மேயர் கவிதா தீர்மானம் நிறைவேற்றினார் இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடு குறித்து பேட்டி கொடுத்தால் சஸ்பெண்டு செய்வதா? என கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள்,  இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆணையர் அதே நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார் அவரையும் சஸ்பெண்ட் செய்வீர்களா? என  கேள்வி எழுப்பியதால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :Source link