ஊராட்சி மன்ற பெண் தலைவரை ஒருமையில் பேசியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றினர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுமதி என்ற பெண் சமையலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.  பட்டியலின சமூகத்தை சார்ந்த அவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம்  கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த பின்னர் மாணவர்களுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பட்டியலின பெண் சமைத்தால் எங்கள் குழந்தைகள் சாப்பிட முடியாது என பெற்றோர் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

‘ isDesktop=”true” id=”1145224″ youtubeid=”5o0P8CSqOxw” category=”karur”>

இதனால் கோபம் அடைந்த மாவட்ட ஆட்சியர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் சில மணி நேரத்திற்கு பின்னர் மன்னிப்பு கடிதம் வழங்கிய பிறகு வழக்குப் பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.

ஒருமையில் பேசியதாக பகீர் புகார்

இந்த நிலையில் தெத்துப்பட்டி ஊராட்சி மன்ற பெண் தலைவர் நாகராணியை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேற்று முன்தினம்  நடைபெற்ற ஆய்வின் போது  பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள்  முன்னிலையில் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தெத்துப்பட்டி ஊராட்சி மன்ற பெண் தலைவர் நாக ராணியை ஒருமையில் பேசியதாக மாவட்ட ஆட்சியருக்கு வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட, மாநில கூட்டமைப்பிற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.

செய்தியாளர் : தி.கார்த்திகேயன், கரூர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link