திருத்தணியில் ஓடும் பேருந்துக்குள் பெய்த மழை, அதிர்ச்சியடைந்த மக்கள், சற்றும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் நடத்துனரால் பயணிகள் ஆவேசம்.
வேலூர் பணிமனையை சேர்ந்த தடம் எண் 777 என்ற அரசுப்பேருந்து ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி வந்து சேருவதற்குள் கனமழை கொட்ட தொடங்கியது. வெளியே பெய்யும் மலையை பேருந்தில் சென்றவாறு மக்கள் ரசிப்பது வழக்கமான ஒன்று. அனால் இந்த பேருந்தில் பயணித்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆம், திருத்தணியை நோக்கி சென்று கொண்டிருந்த அரச விரைவு பேருந்தில் இருந்த ஓட்டைகள் வழியாக பேருந்துக்குள் மழை நீர் ஒழுக தொடங்கியது. பேருந்துக்குள் இருந்து சீட்டுகள் முழுவதும் மழைநீரால்நனையத் தொடங்கியது, இதனால் குழந்தைகளுடன் வந்தவர்கள் வயதானவர்கள் இதனால் மிக சிரமம் அடைந்தனர்.
இதையும் படிங்க: இந்த 4 மாவட்டங்களில் 2 நாளுக்கு வெளுக்கப்போகுது கனமழை.. வானிலை அலெர்ட்
இந்த அசௌகரியமான சூழலை சிறிதும் கண்டுகொள்ளாத நடத்துனர் பயணிகளிடம் டிக்கெட் விநியோகிப்பதில் மும்மரமாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், காயலான் கடைக்கு போகக்கூடிய பேருந்துகளை இப்படி விரைவு பேருந்து என்று எடுத்து வந்து இப்போது பஸ்சுக்குள் மலை பெய்து கொண்டிருக்கிறது என்றனர், மேலும் நடத்துனரிடம், டிக்கெட் மட்டும் கொடுக்குறீங்க கொடையும் சேர்த்து கொடுங்க என்று ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் எதையும் பயணிகளின் வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.
இப்படி பயணிகளுக்கு அசௌகரியத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மேலும் இப்படிப்பட்ட பேருந்தை இயக்க துணைபோன அதிகாரிகள் மீது பயணிகள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.
– செய்தியாளர் சசிகுமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.