முன் காலத்தில் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய முக்கிய பொருளாக இருந்த சீமார் எனப்படும் வீடு பெருக்கும் துடைப்பம், நவீன கால வளர்ச்சியில் தற்போது பெரும்பாலும் எளிய மக்களின் இல்லங்களில் மட்டும் இருக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்திலும் சீமார்களின் விற்பனைகள் குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் கோவில் வழி அடுத்துள்ள அழகுமலை ஊராட்சியில் சீமார் தயாரித்து விற்பனை செய்து வரும் மகாலி வியாபாரிடம் பேசினோம். அப்போது பேசிய அவர், ‘கடைகளில் சீமார்கள் 60 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

திருப்பூர்

திருப்பூர்

ஆனால் அதனை தயார் செய்கின்ற எங்களிடம் 25 ரூபாய் மட்டுமே கொடுத்து அவை வாங்கப்படுகிறது என்றார். மேலும் கூறுகையில், ‘நான் கடந்த 10 வருடங்களாக இதனை செய்து வருகிறேன். மாலை நேரங்களில் தோப்புகளுக்கு சென்று தென்னை ஓலை எடுத்து வருவேன்.

பின்னர் காலை நேரங்களில் அதில் உள்ள ஈக்குமாறு குச்சிகளை உருவி சீமார் தயாரித்து வருகிறேன். தினமும் ஐந்து அல்லது ஆறு சீமார்களே தயார் செய்ய முடியும். அதற்கு வெறும் 25 ரூபாய் மட்டுமே கொடுப்பார்கள். இந்த தொகைக்கு கூட சிலர் பேரம் பேசுவது வேதனையாக இருக்கிறது.

கஷ்டப்பட்டு உழைத்து தயார் செய்வதை இவ்வளவு குறைந்த விலையில் கேட்டால் எப்படி எங்களால் பிழைக்க முடியும். வேறு வேலைக்குச் செல்ல முடியாததால் கிடைப்பது மிச்சம் என்று இந்த தொழிலை செய்து வருகிறேன். சிறிதாக பெட்டிக்கடையும் வைத்து காலத்தை நடத்தி வருகின்றேன்.

இதில் எங்களுக்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த தொழிலை செய்து வருகிறோம். மக்கள் எங்கள் தொழிலையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Vinayagar Chaturthi 2023 : திருப்பூர் அழகு மலையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்!

கடைகளில் அதிக விலையை வைத்து விற்கிறார்கள். அங்கே அவர்கள் பெரும்பாலும் பேரம் பேசாமல் வாங்குகிறார்கள். நாங்கள் சொந்தமாக தொழில் செய்து தயாரித்து 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்றாலும் பேரம் செய்து வருகிறார்கள். அது வேதனைக்குரிய ஒன்று என்று தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link