திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பிலிப் சாரதா பாய் ஜெரினுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது. இவர் இப்பள்ளியில் 2012 முதல் முதல்வராக உள்ளார். இப்பள்ளிக்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளார். பள்ளியில் முதல்வராக ஆகும் பொழுது 340 மாணவர்கள் இருந்தனர். தற்பொழுது இந்த எண்ணிக்கை 496 மாணவர்கள் என அதிகரித்துள்ளது.
இது குறித்து பேசிய அவர், ‘எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. அனைத்து தரப்பு மாணவர்களும் இங்கு பயில்கின்றனர். சமமாக மாணவர்கள் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறோம்.
சமுதாயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஒழுக்க விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது தொடர்பான கவுன்சிலிங் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களையும் மேம்படுத்துவது தான் எங்களின் நோக்கம். கல்வியை மட்டும் போதிக்காமல் எதிர்காலத்தில் மாணவர்கள் நல்ல குடிமகன்களாக வாழ கற்றுக் கொடுக்கிறோம். இப்பள்ளி 1997-ல் ஆரம்பிக்கப்பட்டது.
எங்களிடம் படித்த மாணவர்கள் மருத்துவர், இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். எங்களின் பள்ளியின் தரம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளும் கற்று கொடுக்கப்படுகின்றன.
நெல்லை புனித சவேரியார் பேராலய பொன்விழா கொண்டாட்டம் கோலாகலம்..!
மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அண்மையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இப்பள்ளியை உயர்த்துவதற்கு அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து பாடுபடுவேன்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.