மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம்ஆதீனத்துக்கு சொந்தமான 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர்திருக்கோயில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரிய கோயிலாகும்.இங்கு கடைசியாக கடந்த 2004ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்நிலையில், கும்பாபிஷேகம் மீண்டும் நடத்த 2022ஆம் ஆண்டு கோயில் புதுபிக்கும் பணி நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஏறத்தாழ 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (செப். 10) வள்ளலார் ஆலய கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

எட்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து,கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் மயிலாடுதுறைக்குகொண்டுவரப்பட்டு துலாக்கட்ட காவிரியில் இருந்து மேளதாளம் முழங்க 5 யானைகள்மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்து புனித நீர் கோயிலை வந்தடைந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

இதனை அடுத்து புனித குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் மக்கள் சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம், மதுரை ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link