கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது காய்கறிகளின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. குமரி சந்தையில் தற்போதைய காய்கறிகளின் விலை பட்டியலை தற்போது பார்க்கலாம்.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவிலில் உள்ள அப்டா, வடசேரியில் காய்கறி சந்தைகள் பிரதான சந்தைகளாக உள்ளன. இதே போன்று ஆரல்வாய்மொழி, காவல் கிணறு பகுதிகளிலும் காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இன்றைய விலை அடிப்படையில் கடந்த வாரம் கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட இஞ்சி தற்போது கிலோ 120 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி கிலோ 20 ரூபாய்க்கும்,65 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 55 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் 35 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் கிலோ 55 ரூபாய்க்கும், 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீட்ரூட் கிலோ 30 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் கிலோ 100 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : டபுள் மடங்கு அதிகரித்த வண்டலூர் பூங்கா நுழைவு கட்டணம்.. பார்வையாளர்கள் அதிர்ச்சி!

இதுமட்டுமின்றி 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெண்டைகாய் இன்றைய விலை நிலவரப்படி கிலோ 20 ரூபாய்க்கும், 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிகாய் கிலோ 20 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூசணிகாய் கிலோ 15 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாகற்காய் கிலோ 40 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட புடலை கிலோ 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாங்காய் கிலோ 70 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளவக்காய் 20 ரூபாய்க்கு, 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளரிக்காய் கிலோ 10க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் கிலோ 20க்கும், காலிஃப்ளவர் கிலோ 35க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலை குறைவால் இல்லத்தரசிகள், உணவகம் நடத்துவோர், சமையல் தொழிலில் ஈடுபட்டிருப்போர், சாலையோர உணவகங்கள் நடத்துவோர் என பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link