பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “போலீஸில் புகார் அளித்தது முதல் ஊடகத்தைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால்தான் அதன் பின்னர் ஊடகத்தைச் சந்திக்கவில்லை” என்றார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றது தொடர்பாகப் பேசிய விஜயலட்சுமி, “வழக்கைத் திரும்பப் பெறுகிறேன். நான் பெங்களூருக்குப் போகப் போகிறேன். திரும்பி சென்னைக்கு வரும் மனநிலையில் இல்லை. சீமான் சாரிடமும் பேசினேன். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை குறித்துத் தெரியவில்லை. முதலில் என்னை விசாரித்தார்கள். அவருக்கு (சீமான்) இரண்டு சம்மன் அனுப்பினார்கள். அவர்தான் சொல்லிவிட்டாரே, `20 சம்மன் வந்தாலும் கவலை இல்லை’ என்று. என்னால் தனி ஒருவராகப் போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்குப் போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் முழு முயற்சியுடன்தான் களமிறங்கினேன். ஆனால் முடியல. சீமான்தான் சூப்பர். அவருக்குத்தான் ஃபுல் பவர் இருக்கு தமிழ்நாட்ல. அவர் முன்னால யாருமே ஒண்ணுமே பண்ண முடியாது. நான் தோல்வியை ஒத்துக்கிட்டுப் போறேன். எதிரியா இருந்தாத்தான் வேதனையா இருந்திருக்கும். இது நான் உடன் வாழ்ந்த நபர்தானே… பரவாயில்லை. நிறைய வேதனைப்படுத்தினார். திட்டினார். இருந்தாலும் பரவாயில்லை. சீமான் எப்பவுமே நல்லா இருக்கட்டும். சக்சஸ்ஃபுல்லா இருக்கட்டும்” என முடித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY