கலைஞரின் மகளிர் உரிமை தொகை தங்களின் வங்கி கணக்கில் வந்துள்ளதா என அறிந்துகொள்ளும் நோக்கில் ஓரே நேரத்தில் வங்கியில் ஏராளமான குடும்பத் தலைவிகள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளான நேற்று காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் களைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் , தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின் கீழ்,  1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை உறுதிபடுத்துவதற்கான குறுந்தகவலும், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களினால் குறுந்தகவல் மூலம் உறுதிபடுத்திக் கொள்ள முடியாத பெண்கள், நேரடியாக வங்கிக்கு சென்று ரூ.1000\- வரவு வைக்கப்பட்டுள்ளதாக என்பதை விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று காலை முதலே ஆரணி டவுன் தச்சூர் சாலையில்உள்ள இந்தியன் வங்கியில் கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர்கள் குவியத் தொடங்கினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

ஏற்கனவே இந்தியன் வங்கியில் முதியோர் உதவி தொகை, 100 நாள் பயனாளிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினும் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், ஆயிரக்கணக்கான உரிமைத் தொகை விண்ணப்பதாரர்கள் ஓரே நேரத்தில் வங்கிக்கு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால்,  பெண்கள், முதியவர்கள், வறியவர்கள் என அனைவம் வங்கியில் சோர்வற்று, உற்சாகமற்ற நிலையில் காணப்பட்டனர்.

இதையும் வாசிக்கரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.! 

ஓரே நேரத்தில் வங்கியில் பெண்கள் குவிந்ததால் வங்கியின் சர்வர் பழுதடைந்தன இதனால் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பெண்கள் மற்றும் முதியவர்கள் நின்று அவதிக்குள்ளாயினர்.

செய்தியாளர்:  ம.மோகன்ராஜ் , ஆரணி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link