தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமமைந்துள்ள அம்மா உணவகத்தில் அரணை (பாம்பு ராணி) இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் நகரில் வசித்து வரும் சரவணன் எல்ஐசி ஏஜெண்டாக பணி செய்து வருகிறார்.  திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில்,  மருத்துவமனைக்கு அருகே உள்ள அம்மா உணவகத்தில் இன்று தனது குடும்பத்தினருக்கென 4 சாம்பார் சாத உணவை  பார்சலாக வீட்டிற்கு வாங்கிச் சென்றார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

வீட்டில், குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து மதிய உணவை எடுத்துக் கொண்டனர். அப்போது, சரவணன் சாம்பார் சாதத்தில் பாம்பு ராணி என்ற ஊர்வன இருந்தது. இதனைக் கண்டு,  மிகவும் அதிர்ச்சியடைந்த அவர், உரிய விளக்கம் கேட்பதற்காக அம்மா உணவகத்திற்கு வந்தார். ஆனால், அந்த உணவகம் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அருகில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்றார்.

ஏழை மக்கள், கூலி உழைப்பாளிகள், வறியவர்களே  அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில்,  வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் பாம்பு ராணி கிடந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: முரளி கணேஷ்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link