சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், விநாயகர் கோவில் கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி அன்று, அங்கு சிலை வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற அரசாணைப்படி கோயிலை அப்புறப்படுத்தக் கோரி, விசிக, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கு போட்டியாக பாஜகவினரும் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து கற்கள் கொண்டு கோயில் அடைக்கப்பட்டது. இந்த கற்களை அதிமுக, பாஜக, பாமக கட்சியினர் அப்புறப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதிமுக,பாமக,பாஜக வினர் சமாதான கூட்டத்தில் பங்கேற்றபோது, கோவில் கூடாது என்று கூச்சலிடுபவர்களின் பெயர் செல்லுமாறும், அவர்ககள் கொலை செய்யப்படுவார்கள் என்று மிரட்டல் தொனியில் பேசியதால் சமாதான கூட்டம் சலசலப்புடன் நிறைவுப்பெற்றது.
சமாதான கூட்டத்தை புறக்கணித்து விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், ” அரசு அலுவலகங்களில் மத அடையாளம் கூடாது என அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அதிமுக, பாஜக, பாமகவினர் வர வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அரசாணையை மதிக்காத அரசு பிடிஓ அலுவலகத்தை விநாயகர் சதுர்த்தியான திங்களன்று விசிக தலைமையில் திக, திவிக, SDPI, தமுமுக உள்ளிட்ட அமைப்புக்களை ஒருங்கிணைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தார்.
செய்தியாளர்- செல்வம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.