தமிழகத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்தே பல இடங்களில் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகமாறுபாடு காரணமாக , தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தேனி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது .

காற்று மாறுபாடு காரணமாகவும் கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை எதிரொலியாகவும் தேனி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது உள்ளது. தேனி மாவட்டத்தில் வைகை அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், வைகை அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது

71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த செப்.11ஆம் தேதி அணைக்கு வரும் நீர்வரத்து 8 கன அடி ஆக இருந்தது. 12 ஆம் தேதி அணைக்கு வரும் நீர்வரத்து 100 கன அடியாக உயர்ந்தது.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அணைக்கு வரும் நீர்வரத்து 193 கன அடியாக அதிகரித்தது.

வைகை அணை

அதேபோல வைகை அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 47.34 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து 170 கன அடியாகவும் வைகை அணையில் இருந்து 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணை சுற்று வட்டார பகுதிகளில் செய்யும் சாரல் மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link