ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு எங்களுடைய புராடக்ட் நன்றாக இருந்ததாக எங்களுக்கு குறிப்பு அனுப்பினார். சமூக வலைதளங்களிலும் எழுதி இருந்தார்.

அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக நேரில் வரலாமா என்று கேட்டிருந்தேன். அப்போது நிறைய விஷயங்களைப் பேசினோம். அப்போது, “நீங்கள் பல நிறுவனங்களில் முதலீடு செய்கிறீர்கள். எங்கள் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்ய முடியுமா?’’ என்று கேட்டேன்.

அவரும் உடனே “ஓகே’’ என்றார். அப்போதே என்ன மாதிரி முதலீடு செய்யலாம் என்று பேசத் தொடங்கினோம். இப்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

அவர்கள் நினைத்தால் பெரிய பன்னாட்டு நிறுவன பிராண்டுகளுடன் இணைவது பெரிய விஷயமல்ல. ஆனால், பிராந்திய அளவில் மிகப் பெரிய பாசிட்டிவ்வான விளைவுகளை ஏற்படுத்தும் எங்களுடன் இணைந்திருப்பது பெரிய மகிழ்ச்சி’’ என்று கிருபாகரன் தெரிவித்தார்.

மேலும், “இந்த நிதியைப் புதிய புராடக்ட்டுகள் மற்றும் மார்க்கெட்டிங்குக்கு செலவு செய்ய இருக்கிறோம். இந்த முதலீடு எங்களுக்கான அடுத்தகட்ட வளர்ச்சியைக் கொடுக்கும்’’ என நம்புவதாக கிருபாகரன் தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் நடிகை நயன்தாரா இனிவரும் காலத்தில் மிகப் பெரிய தொழிலதிபராக வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது!



Source link