சேலை நெய்வதற்கு பாவு போடுவது தான் மிக முக்கியமான பகுதி, இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த நெசவாளர் ஜீவன் ராம் விளக்கி கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, புதுக்குடி, வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்கைத்தறி நெசவு மூலம் சௌராஷ்டிரா சமுதாய மக்களால் செடி புட்டா, பட்டு ஆகிய சேலைகள்தயார் செய்யப்படுகிறது. சுமார் 100 வருடங்களுக்கு மேலாக அவர்கள் அந்த சேலையை உற்பத்தி செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த நெசவாளர் ஜீவன் ராம் என்பவரை சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருநெல்வேலி வந்தபோது நேரில் சென்று பாராட்டினார். இந்நிலையில் இச்சேலை தயாரிப்பு குறித்து நெசவாளர் ஜீவன் ராம் நம்மிடையே கூறுகையில், “புதுக்குடி வீரவநல்லூர் ஆகிய இடங்களில் கைத்தறிகள் அதிகளவில் இயங்கி வந்தன. இதற்கான பாவுகளை கையால் இயக்கப்படும் ஆலைகளில் தயாரித்து, பசை சேர்ப்பதற்காக, அதிகாலையில் தெருக்களில் விரித்து, பணியாற்றுவர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி

பசை சேர்ப்பதால், நுால் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொள்ளாமல் இருக்க, குறுக்கில், மூங்கில் அலகுகளை பாய்ச்சி, அவற்றை தொடர்ந்து பிரிக்கும் வேலையை மேற்கொள்வர். தெருவில் விரிக்கப்படும் பாவுக்கு, 5 பேர் வரை இணைந்து செயல்படுவர்.

தற்போது சேலையை நெசவு செய்வது குறைந்துவிட்டது. எனவே பாவு போடுவதற்கும் இடம் பற்றாக்குறையும் ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வேறு வழி இன்றி இத்தொழிலை செய்து வருகிறோம். செடி புட்டா சேலைக்கு அரசு புவிசார் குறியீடு கொடுத்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கிறோம். நெசவாளர்களின் வேலை கடினமாக இருப்பினும் அதனை விடாமல் குறைந்த அளவிலானோர் தொடர்ந்து செய்து வருகிறோம். எனவே அரசு கூடுதலாக சலுகைகள் செய்தால், மேலும் பலர் நெசவுத் தொழிலை மேற்கொள்வார்கள்” என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link