திருச்சியில் கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், திருச்சி சாஸ்திரி ரோடு மற்றும் தில்லைநகர் பகுதியை சுற்றியுள்ள ஷவர்மா, கோழிக்கறி விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் அசைவ உணவுகளை விற்பனை செய்யும் 21 உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் இருந்த கெட்டுப்போன கோழி இறைச்சிகள், அசைவ உணவு வகைகள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் என சுமார் 140 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், ஒன்பது கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில், 5 கடைகளுக்கு தலா, 3,000 வீதம், 18,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று பிரபல ஜூஸ் கடைகளை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் 50 கிலோ அளவிலான அழுகிய பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், ஏற்கனவே இதுபோன்று குற்றங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட கடைகளுக்கு தொடர் குற்றத்தின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது.

சோதனையின் போது மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறியபோது, “ஷவர்மா கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்கள், அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. ஆய்வின்போது, அவ்வாறு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட கோழி இறைச்சியோ அல்லது வேறு கெட்டுப்போன உணவுப் பொருளோ கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க : டிடிஎஃப் வாசனின் ட்ரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய நடவடிக்கை

மேலும், “பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதியில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் குறித்து, 9944959595, 9585959595, மாநில புகார் எண்- 9444042322 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்” என்றும் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link