மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 510 புள்ளிகள் சரிவடைந்து 67,086 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 143 புள்ளிகள் சரிந்து 19,990 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 618.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,978.69 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 124.05 புள்ளிகள் சரிந்து 20,009.25 ஆக இருந்தது.

இன்று இரவு நடக்க இருக்கும் அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்திய எச்சரிக்கை உணர்வு, ஹெச்டிஎஃப்சி வங்கிப்பங்குகின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை பெரும் சரிவுடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன.

ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், மாருதி சுசூகி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

Source link